“பொதுப்பணித் துறையை முதல்வர் வைத்திருக்கக் கூடாது!”

‘‘காவிரியிலும், கொள்ளிடத்திலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும்கூட, பெரும்பாலான கிராமங்களுக்குத் தண்ணீர் வந்துசேரவில்லை’’ என்று குமுறுகிறார்கள் டெல்டா பகுதி மக்கள். இதற்கு முதல்வரையே குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக, தமிழக முதல்வராக இருந்த யாருமே பொதுப்பணித் துறையைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டதில்லை. பொதுப்பணித் துறை என்பது முழு கவனம் தேவைப்படும் ஒரு துறை. இதை முதல்வர் ஒரு பகுதிநேர வேலையாகப் பார்ப்பது தவறு. காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தண்ணீருக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. பொதுப்பணித் துறைக்கு என்று தனி அமைச்சர் இருந்திருந்தால், இங்கு வந்து தேவைகளைக் கேட்டிருப்பார்; பணிகளை ஆய்வுசெய்திருப்பார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 2,300 ஏரிகள் உள்ளன. அவற்றை முறையாகப் பராமரித்தாலே, தண்ணீரை மிக எளிதாகச் சேமிக்கலாம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick