இடைத்தேர்தல் 2 தொகுதிகளுக்கா... 20 தொகுதிகளுக்கா?

மிழக அரசியல் சலனமின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடியதாக இரண்டு நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒன்று, திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். மற்றொன்று, தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு.

இந்த வழக்கில் 18 பேருக்கும் பாதகமாகத் தீர்ப்பு வந்தால், இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமல்ல... 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தினகரன் தரப்பு தனது இறுதி வாதத்தை நிறைவு செய்துவிட்டது. சபாநாயகர் தரப்பு வாதங்களும் ஏறத்தாழ முடிந்துவிட்டன. ஆகஸ்ட் 31-ம் தேதியன்று இரண்டு மணி நேரத்தில் அவர்கள் தரப்பு இறுதி வாதங்களை எடுத்து வைக்க நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார். அன்று வழக்கு விசாரணைக்கு வந்தால், தீர்ப்பின் தேதியும் அன்றே தெரிந்துவிடும்.

தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னரிடம் கடிதம் கொடுப்பதற்கு முன்பு, கட்சி மட்டத்திலேயே பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள எம்.எல்.ஏ-க்கள் முயற்சி செய்தார்கள். முதல்வரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்கள்’’ என்றார். ‘‘இதற்கு ஆதாரமாக சி.சி.டி.வி பதிவுகள் உள்ளனவா? முதல்வர் அறை வாசலில் சி.சி.டி.வி கேமரா உள்ளதா?’’ என்று கேட்டார் நீதிபதி. ‘‘இருக்கலாம். அதேபோல சபாநாயகரின் அறையிலும் முதல்வரைச் சந்தித்து, அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்கள். சபாநாயகர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்தே இந்த வழக்கு நடைபெறுகிறது. எனவே, அவரைக் கூப்பிட்டுக் குறுக்குவிசாரணை செய்ய முடியாது’’ என்றார் ராமன். இதை நீதிபதி கவனமாகக் கேட்டுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick