அ.தி.மு.க-வினருக்கே என் திறமை தெரியுது! - அழகிரி அதிரடி | M.K.Azhagiri Political Activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அ.தி.மு.க-வினருக்கே என் திறமை தெரியுது! - அழகிரி அதிரடி

மிழக ஊடகங்கள் அனைத்தும் அழகிரியைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. அவர் உதிர்க்கிற ஒன்றிரண்டு வார்த்தைகள்கூட பிரேக்கிங் நியூஸ் ஆகின்றன. நான்கு வருடங்களாக ஆள் அரவமற்றுக் கிடந்த மதுரை சத்யசாய் நகர் பகுதி, இப்போது பரபரப்பாகக் காணப்படுகிறது. ‘அஞ்சாநெஞ்சர்’ என்று அச்சிட்ட சட்டை அணிந்த தொண்டர்களை நீண்ட காலத்துக்குப்பின் பார்க்க முடிகிறது. வீட்டு வாசலில் ஷாமியானா அமைக்கப்பட்டு, நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். எல்லாமே, செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் அழகிரி நடத்தவுள்ள பேரணிக்கான ஆலோசனைக் கூட்டத்துக்காகத்தான்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் அமைதிப் பேரணி நடத்தி, தன் பலத்தைக் காட்டத் திட்டமிட்டுள்ளார் மு.க.அழகிரி. அதற்கான ஏற்பாடுகளில் அவர் காட்டிவரும் ஆர்வம், அனைவரையும் வியக்கவைக்கிறது. கருணாநிதி சமாதிக்குச் சென்று அவர் நிகழ்த்திய மெரினா புரட்சி, தி.மு.க-வைத் தாண்டி மற்ற கட்சிகளுக் குள்ளும் பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னையில் சிலரிடம் ஆலோசனை நடத்திவிட்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மதுரை வந்த அழகிரி, உடனே பேரணிக்காக ஆட்களைத் திரட்டும் வேலையில் இறங்கிவிட்டார்.

2014-ல் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, மீண்டும் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார். முடியவில்லை. வெறுத்துப்போன அழகிரி, அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். கோபம் வரும்போதெல்லாம், ஸ்டாலின் எடுத்த தேர்தல் நிலைப்பாடுகளை அவ்வப்போது விமர்சிப்பார். ஆனால், அழகிரியை ஸ்டாலின் தரப்பு கண்டுகொள்ளவில்லை. கருணாநிதியின் மரணத்துக்குப்பின், அழகிரி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். அழகிரியின் தீவிர விசுவாசிகளான இசக்கிமுத்து, பி.எம்.மன்னன், கவுஸ்பாட்சா, முபாரக் மந்திரி, கோபிநாதன், உதயகுமார் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick