“அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்! - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர்!” | ADMK Executive Committee Meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்! - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர்!”

‘நாம் ஒன்றும் பி.ஜே.பி-யின் அடிமை இல்லை’ என்ற ஒற்றை முழக்கம் ஓங்கி ஒலித்துள்ளது அ.தி.மு.க செயற்குழுவில். ஜெ. மரணத்துக்குப் பிறகு முதல்முறையாக  பி.ஜே.பி-மீது அ.தி.மு.க தலைமை வைத்திருக்கும் இந்த விமர்சனம், தமிழக அரசியல் கணக்கையே மாற்றிப்போடும் நிலையை உண்டாக்கியுள்ளது.

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம், ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, பி.ஜே.பி அரசின் மனம் கோணாமல் செயல்பட்டு வந்த அ.தி.மு.க தலைமையின் மனமாற்றம், வரவேற்புரை ஆற்றிய தம்பிதுரையின் பேச்சிலேயே தெரிய ஆரம்பித்தது. ‘‘தேசியக் கட்சிகள் நம்மை அண்டியே இருக்கவேண்டிய கட்டாயத்தை அம்மா உருவாக்கி வைத்திருந்தார். அந்த நிலையை வரும் காலத்திலும் நாம் ஏற்படுத்த வேண்டும்’’ என்று பி.ஜே.பி-க்கு செக் வைக்கும் விதத்தில் சொன்னார் தம்பிதுரை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick