“வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம்!” | Fertility controversy in Madurai Government Hospital - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம்!”

வில்லங்க புகாரில் மதுரை மருத்துவமனை

துரை விரகனூரைச் சேர்ந்த யாஸ்மினுக்கு ஏற்பட்ட அனுபவம் உலகில் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படவே கூடாது. கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்து, பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகள் அளிக்கப்பட்டு, அரசு தருகிற நிதியுதவி பெற்று, ஒன்பதாவது மாதம் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்... ‘உங்களைக் கர்ப்பிணி என யார் சொன்னது?’ என மருத்துவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் அவர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனை. பிறந்த குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் இங்குதான் அதிகம் நடந்துள்ளன. அதில் ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி இன்னும் விசாரித்து வருகிறது. மகப்பேறு வார்டில் தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்கும் கொடுமையைத் தடுக்க முடியவில்லை. இப்படி இந்த மருத்துவமனையை மையமாக வைத்துப் புகார்கள் கிளம்புவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில்தான், தன் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போய்விட்டதாக மதுரை கலெக்டர் வீரராகவ ராவிடம், நவநீதகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி அவரிடம்  பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick