பொக்லைன் இயக்கும் குழந்தைத் தொழிலாளி!

அத்துமீறல்களைத் தடுக்க அதிகாரிகள் இல்லை

சென்னை அண்ணா நகரில் ஒரு பொக்லைனில் அமர்ந்து, பழைய கட்டடம் ஒன்றை இடித்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தபடி வாகனங்களில் அந்த இடத்தைக் கடந்துசென்றார்கள் நூற்றுக்கணக்கான மக்கள். அவனது உருவத்துக்கு அந்த வாகனம் பிரமாண்டமானது. கட்டட இடிபாடுகளின்மீது அந்த வாகனம் தாறுமாறாக ஏறி இறங்க, ‘சிறுவன் விழுந்து விடுவானோ... வாகனம் கவிழ்ந்து பையனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ... ஆபத்தான வேலையைச் செய்கிறானே’ என பதைபதைத்த ஒருவர், சைல்டு லைனுக்கு போன் செய்து பதறியபடி இதைத் தெரிவித்துள்ளார்

 “போலீஸுக்கு தகவல் சொல்லிவிட்டு அங்கு போனோம். 16 வயது சிறுவன், பொக்லைன்மீது அமர்ந்தவாறு கட்டடத்தை இடித்துக் கொண்டிருந்தான். அவனை மீட்டு திருமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம்” என்று நம்மிடம் தெரிவித்தார் சைல்டு லைன் குழுமத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நோர்லன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick