அமெரிக்க டாக்டர் முதல் சுப்பிரமணியன் சுவாமி வரை!

ஆறுமுகசாமி ஆணையத்தில் லேட்டஸ்ட்

ளும்கட்சி சார்பில் நடத்தப்படும் ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழில் வெளியாகியுள்ள ‘மாஃபியா தடை... மர்மத்தை உடை...’ என்ற கவிதை, அரசியல் வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான எய்ம்ஸ் டாக்டர்கள், ‘அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை. சிகிச்சையை மேற்பார்வையிடவே வந்தோம்’ என்று சொன்னதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, ‘எழுபத்தைந்து நாளா என்னதான் செஞ்சாங்க... ஆக்டோபஸ் கும்பல் அரணமைச்சு நின்னுச்சு... அம்மாவை அமைச்சர்கள் பார்க்கவும் அனுமதிக்க மறுத்துச்சு. அயல்நாடு கொண்டுசென்று மேல்சிகிச்சை செய்ய லாமான்னு ஓர் ஆலோசனைக் கூட்டம்கூட நடத்தலை’ என்கிறது அந்தக் கவிதை.

‘அடுத்து லண்டன் டாக்டரை வரவழைத்துக் கிண்டினால், அவரும் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்று சொல்லலாம். அப்போலோ மருத்துவர்களாவது அம்மாவுக்குச் சிகிச்சை தந்தார்களா என்பது தெய்வத்துக்கே வெளிச்சம். அண்ணா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். எம்.ஜி.ஆருக்கும் அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. கண்ணதாசன்கூட அமெரிக்கா போனார். எங்கள் அம்மா செஞ்ச பாவம் என்ன? மாஃபியா கும்பலே விடை சொல்... மர்மங்களுக்குப் பதில் சொல்!’ என்று நீள்கிறது அந்தக் கவிதை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick