“கொள்ளிடத்தின் கதிதான் மற்ற அணைகளுக்கும்!” - எச்சரிக்கும் என்ஜினீயர்கள்

‘‘நமக்கு திடீர்க் காய்ச்சல் வருவதுபோல, முக்கொம்பு அணையும் திடீரென உடைந்துள்ளது’’ என்று பொதுப்பணித் துறையின் அமைச்சரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முக்கொம்பு தடுப்பணை உடைந்ததற்குக் காரணம் சொல்லியிருக்கிறார்.

திருச்சியில் முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அணைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. திருச்சியில் கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட மேலணையின் ஒன்பது மதகுகள் உடைந்து, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. அணையில் இருந்து இரும்பு உத்தரங்களைத் திருடியதாலும், அளவுக்கு அதிகமாகக் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டதாலும் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாள்கள் கழித்து உடைந்த அணையைப் பார்வையிட வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிக அழுத்தத்தின் காரணமாகவே அணை உடைந்திருக்கிறது. மணல் அள்ளுவதால் அணை உடையவில்லை’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick