கழுகார் பதில்கள்! - ஹீரோக்கள் தேர்தலில்... யார் முதல்வர்? | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கழுகார் பதில்கள்! - ஹீரோக்கள் தேர்தலில்... யார் முதல்வர்?

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

விஜயகாந்த், கமல், ரஜினி மூலவர்களாகவும்; விஜய், அஜித், சூர்யா உற்சவர்களாகவும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்களா... முதல்வராக யார் வருவார்கள்?


ஹலோ மிஸ்டர் ராமதாஸ், மிக நன்றாகக் கதை கைவருகிறதே. நீங்கள் சொன்னவர்களில் இரண்டு ஹீரோக்களை ஒன்றாகச் சேர்த்து வைத்துப் படம் எடுப்பதே பெரும்பாடு. நீங்கள் என்னடாவென்றால், அத்தனை பேரின் கால்ஷீட்களையும் வாங்கி வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே. முதல்வர் யார் என்பதுதான் க்ளைமாக்ஸ். அதையும் நீங்களே முடிவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஆனால், அதை மட்டும் ரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் படத்தை நூறு நாள் களுக்கும் மேலாக ஓடவைக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick