மிஸ்டர் கழுகு: அழகிரி அவுட்... அடுத்து கனிமொழி?

‘‘மு.க.ஸ்டாலினுக்கு, தலைவர் மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. பொருளாளர் துரைமுருகனுடன் சேர்ந்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதெல்லாம் திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செய்திகள். இப்படி திரைக்கு வராத செய்திகள் உம்மிடம் தானே இருக்கும்... கொஞ்சம் எடுத்துவிடும்!’’

- அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம் கொக்கி போட்டோம். அர்த்தம் பொதிந்த புன்னகையைத் தவழவிட்டவர், ‘‘ஸ்டாலினின் காய் நகர்த்தலில், அழகிரி எப்போதோ வெட்டுப்பட்டு வெளியேறிவிட்டார். இப்போது கனிமொழிக்கு எதிரான வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்று சொன்னார்.

‘‘என்ன இது? தலைவர் பதவியேற்ற அண்ணனுக்கு, அங்கேயே முத்தமெல்லாம் கொடுத்து வாழ்த்தினாரே தங்கை? ‘டெல்லியில் இனி கனிமொழிதான் எல்லாமே என்று பேசிமுடித்துவிட்டார்களாம்’ என்று கடந்த முறைகூட சொன்னீரே?’’ என அதிர்ந்துபோய்க் கேட்டோம்.

‘‘உண்மைதான். ஆனால், பொதுக்குழு மேடையில் கனிமொழி உதிர்த்த வார்த்தைகளை நீர் கவனிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நன்றாகவே கவனித்துவிட்டனர். அதுதான், கனிமொழிக்கு எதிரான அம்பாக மாறிவிட்டதாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்