பொதுக்குழுவில் புது ஸ்டாலின்!

‘‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’’ என்று கருணாநிதியின் கரகர குரலைக் கேட்டுப் பழகிய தி.மு.க பொதுக்குழு, ‘‘என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு வணக்கம்...’’ என்ற புதிய தலைவர் ஸ்டாலினின் பேச்சை முதல்முறையாகக் கேட்டு ஆர்ப்பரித்தது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைவரின் ஆசனத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு 7.45 மணிக்கு அமர்ந்தார் ஸ்டாலின். ‘‘50 ஆண்டுகள் கருணாநிதியால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஆசனத்தில் அமர்ந்தபோது, உணர்ச்சிப் பெருக்கில் அவரின் கண்கள் கலங்கியதைப் பார்க்கமுடிந்தது” என்கிறார்கள் அறிவாலயத்தில் இருப்பவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick