ஐடியா அய்யனாரு!

நோபல் விஞ்ஞானிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு லேட்டஸ்ட் சென்சேஷன் ஆகியிருக்கிறார், திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ். பி.ஜே.பி-யைச் சேர்ந்த இவரின் அதிரடி பேச்சுகள், அநேக சயின்டிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 2030-ம் ஆண்டில் பிப்லப் தேவ் என்னவெல்லாம் பேசுவார்? இதோ சில ஐடியாக்கள்:

அகர்தலா, ஜன.33
சங்க காலத்தில் நம் முன்னோர்கள் ஒருவரோடு மற்றவர்கள் தொடர்புகொள்ள மின்னலைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார் திரிபுரா முதல்வரான பிப்லப் குமார் தேவ். கம்பிகள் இல்லாத அந்தக் காலத்தில், மின்னலை ஆன்டெனாவாகப் பயன்படுத்தி வைஃபை உபயோகித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப். 30
அரசு வேலைகளைத் தகுதியற்றவர்கள் எளிதாகப் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து, இனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே ஐ.ஏ.எஸ் செலக்‌ஷன் தேர்வுகளை எழுதவேண்டுமென்றும், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே ஐ.பி.எஸ் செலக்‌ஷன் தேர்வுகளை எழுதவேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிப்லப் குமார் தேவ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்