விகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்! | Vikatan Lens - Organ Business - Junior Vikatan | ஜூனியர் விகடன்

விகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்!

விபத்தில் மூளைச்சாவடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து, பலரும் தானம் செய்ய முன்வரும் சூழல் உருவாகியுள்ளது. அப்படி தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளைப் பெறுவது, அவற்றை உரிய நோயாளிகளுக்குப் பொருத்துவது ஆகியவை தொடர்பாகக் கடும் விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும், அந்த விதிமுறைகளை மீறி, கள்ளாட்டம் ஆடுகிறார்கள் கல்நெஞ்சக்காரர்கள். கடந்த மே மாதம், கேரளாவைச் சேர்ந்த பி.மணிகண்டன், கள்ளக்குறிச்சி அருகே சாலைவிபத்தில் சிக்கினார். மூளைச்சாவடைந்த அவரின் உடல் உறுப்புகள் தானத்திலும் விதிமீறல்கள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது கேரள அரசுக்கும் தமிழக அரசுக்குமே உரசலை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ஒரு திருமணத்துக்காக இசைக் கலைஞர்கள் எட்டு பேர் மேல்மருவத்தூருக்கு வந்தனர். திருமணம் முடிந்து, மே 18-ம் தேதி பாலக்காட்டுக்கு அவர்கள் திரும்பிச் சென்றபோது விபத்து நேர்ந்தது. ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில், 22-ம் தேதி மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தது மருத்துவமனை நிர்வாகம். மணிகண்டனின் இதயம், சென்னை அடையாறில் உள்ள ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனைக்கும்; நுரையீரல், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கும் தானமாகத் தரப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick