மினி மீல்ஸ்

‘‘அதே நாளில் கல்யாணம் நடக்கணும்!’’

ரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியின் எம்.எல்.ஏ ஈஸ்வரன். 40 வயதைக் கடந்த ஈஸ்வரனுக்கு இப்போதுதான் திருமணம் நிச்சயமானது. உக்கரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான எம்.சி.ஏ படித்த சந்தியா என்ற பெண்ணை நிச்சயம் செய்திருக்கின்றனர். செப்டம்பர் 12-ம் தேதி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் கல்யாணத்தை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் முன்னின்று நடத்தி வைப்பதாக முடிவாகியிருந்தது. இந்த நிலையில், சந்தியா தன் காதலன் ஊத்துக்குளி விக்னேஷுடன் தலைமறைவானார். நிச்சயத்துக்கு முன்பே, ‘40 வயதான ஒருவரை நான் எப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியும்? எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் ஒருவரைக் காதலித்து வருகிறேன்’ என சந்தியா கூறியிருக்கிறார். இருந்தும் பெற்றோர் வற்புறுத்திச் சம்மதிக்க வைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick