“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்!”

ண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்விக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு முடிந்து, முதலாண்டு வகுப்புகள் தொடங்கிவிட்டன. 97,980 இடங்கள், யாரும் சேராமல் காலியாகக் கிடக்கின்றன. வெறும் 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவிகித இடங்கள் நிரம்பின. 268 கல்லூரிகளில், 100 பேருக்கும் குறைவாகவே சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்த நிலவரம் இன்னும் மோசம் ஆகலாம். என்ஜினீயரிங் படிப்புக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. 

பெரும் கனவுகளுடன் என்ஜினீயரிங் சேரும் மாணவர்கள், நான்கு ஆண்டுகளுக்குப்பின் படிப்பை முடித்து வெளியேறும்போது, எதிர்காலம் வெறுமையாக இருப்பது கண்டு விரக்தியடைகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அடிப்படைத் தகுதியைக் கொண்ட வி.ஏ.ஓ பணிக்கான தேர்வுக்குக்கூட, லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள். இச்சூழலில், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்துவருகிறது. 

இதுகுறித்து நாஸ்காம் தமிழ்நாடு மண்டலத் தலைவர் செந்தில்குமாரிடம் பேசினோம். “தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, உரிய பணியாளர்கள் கிடைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. நம் நாட்டில் நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றின் தரம் குறைவாக இருக்கிறது. பள்ளி இறுதிவரை நன்றாகப் படிக்கும் மாணவர்கள், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்ந்தவுடன் திறன் குறைந்துவிடுகின்றனர். காரணம், அவர்களின் கல்வியையும் திறன்களையும் ஊக்குவிக்கும் செயல்பாடுகள் இல்லை. மாணவர்கள் தங்கள் திறனை தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பேராசிரியர்களுக்கு அதற்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அடுத்த தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கும் வகையில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரிகள் செயல்பட வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick