நிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்! | Nirmaladevi case issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்!

“இந்த வழக்கில், ஆரோக்கியமான விசாரணை வேண்டும். 127 நாட்களுக்கு மேல் என்னைச் சிறையில் வைத்துள்ளீர்கள். என்னைத் தற்கொலை முயற்சிக்குத் தள்ளாதீர்கள். என் வாழ்வை முடித்து, ஆதாயமடைபவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னைக் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்யட்டும். வேறு யாரும் முடிவு செய்ய வேண்டாம்’’ என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன் ஆதங்கத்தை மீடியாக்களிடம் கொட்டித் தீர்த்தார் உதவிப் பேராசிரியர் முருகன்.

மாணவிகளைத் தவறான பாதைக்கு அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி அழைத்தது தொடர்பான வழக்கு, விருதுநகரிலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். முருகனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக போலீஸ் காவலுடன் முருகன் அழைத்துவரப்பட்டார். அப்போதுதான், மீடியாக்களிடம் அவர் கொந்தளிப்புடன் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick