இன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா?

ந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் குளறுபடி நிகழ்ந்ததால், மாணவர்களுக்குக் கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு போட்டார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 49 கேள்விகளுக்கு தலா நான்கு மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்களைத் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது.

‘இப்படி மதிப்பெண் கொடுத்தால், பெரும் குழப்பம் வரும்’ என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ வழக்கு போட்டது. ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த வழக்கு விசாரணையில், ‘கருணை மதிப்பெண் வழங்க முடியாது’ என்று சொல்லி, தமிழக மாணவர்களின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு குறித்துத் தொடர்ந்து உரையாடி வருபவரும், இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் இருந்தவருமான கல்வியாளர் ராம்பிரகாஷிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick