ரூ.500 கோடி ஆவணங்கள்... 4,000 தொலைபேசி உரையாடல்கள்... சி.பி.ஐ ரெய்டு!

மிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டிலும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, தமிழகத்துக்கு அந்தப் ‘பெருமை’ கிடைத்தது. இப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பதவியில் உள்ள டி.ஜி.பி வீட்டில் நடைபெற்றுள்ள சி.பி.ஐ ரெய்டு, தமிழகத்துக்கு இன்னொரு ‘பெருமை’யைப் பெற்றுத் தந்துள்ளது. 

ஜூ.வி 25.07.2018 தேதியிட்ட இதழில், மிஸ்டர் கழுகு பகுதியில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், ‘டெல்லியிலிருந்து வந்த 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள் கோவை, சென்னைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முகாமிட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் விவரம், டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலக எஸ்.பி அஸ்ரா கார்க்குக்கே தெரியாது; தமிழகத்தின் சி.பி.ஐ தலைமை அலுவலக அதிகாரி துரைகுமாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அது ரகசியமாக நடந்துள்ளது. குட்கா விவகாரத்தில் தொடர்புள்ள அதிகாரிகளை அறிந்துகொள்ள முனைந்த சி.பி.ஐ., வருமானவரித் துறையை இதற்குப் பயன்படுத்திக்கொண்டது’ என்று குறிப்பிட்டிருந்தோம். அப்போது நடந்த விசாரணைகள் மற்றும் துப்பு துலக்குதலின் விளைவுதான், இரண்டு மாதங்கள் கழித்து செப்டம்பர் 5-ம் தேதி சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, பாண்டிச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உட்பட 35 இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ ரெய்டு.

போலீஸ் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனின் வீட்டில் மட்டுமல்லாமல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், மத்தியக் கலால் வரித்துறை அதிகாரிகள், வணிகர்கள் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ அதிரடி ரெய்டு நடத்தியது. செப்டம்பர் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு டீம் டீமாகப் பிரிந்துபோய், இந்தச் சோதனையை நடத்தினர். ஒரு டீமில் 7 முதல் 10 அதிகாரிகள் வரை இருந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick