விதிகளை வளைத்து பிரான்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர்! | French company to water supply in Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

விதிகளை வளைத்து பிரான்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர்!

கோவை குடிநீர்த் திட்ட மர்மம்

ந்தியா முழுக்க அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்றால், கோவை நகரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டம் குறித்து யாரும் பேசக்கூடாது, எழுதக் கூடாது, விமர்சிக்கக் கூடாது என்று அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஏற்பாட்டில் தான் இந்தத் திட்டம் வந்திருக்கிறது.

இந்தச் சூழலில், கோவையைச் சேர்ந்த   ஆர்.டி.ஐ ஆர்வலரும் வழக்கறிஞருமான லோகநாதன், மிகவும் போராடி இந்தத் திட்டம் குறித்து தகவல்களைப் பெற்றுள்ளார். அவரை சந்தித்துப் பேசினோம். ‘‘கோவை மாநகராட்சியில் 31.01.2011 அன்று நிறைவேற்றப் பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்று ஆவணங்கள் சொல்கின்றன. ‘மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அதற்கு சிறுவாணி, பில்லூர் I, பில்லூர் II குடிநீர்த் திட்டங்களின்கீழ் புதிதாக நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டுவதற்குத் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் ரூ.595.24 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தந்துள்ளது. இதை அரசுக்கு அனுப்பி உரிய மானிய நிதி பெறவும், இப்பணியினை முழுமையாக மேற்கொள்ளவோ அல்லது பகுதி பகுதியாக மேற்கொள்ளவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என்கிறது அந்தத் தீர்மானம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick