குடிமராமத்துக் கொள்ளையால்... கடலுக்குப் போன காவிரி நீர்!

‘ரூ.328 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு நீராதாரத்தைப் பெருக்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி’ – இது சமீபத்தில் நடந்து முடிந்த அ.தி.மு.க செயற்குழுவில் போடப்பட்ட தீர்மானம். ஓராண்டுக்கு கர்நாடகா தரவேண்டிய தண்ணீரைவிட அதிகமாக சில நாட்களில் காவிரியில் வந்துவிட்டது. ‘‘காவிரி கரைபுரண்டு ஓடியும், டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் போகவில்லை” என்கிற வேதனைக் குரல் விவசாய சங்கங்களிடமிருந்து ஒலிக்கும் வேளையில், இப்படி ஒரு தீர்மானமா? அரசு பொய் சொல்கிறதா? இல்லை, விவசாயிகள் பொய் சொல்கிறார்களா? உண்மையை அறிய டெல்டா மாவட்டங்களைச் சுற்றி வந்தோம்.

‘கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வந்துசேரவில்லை’ என்பதுதான் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களின் புகார். ஆனால், ‘இவ்வளவு தண்ணீர் வந்தும் முதல்மடையிலேயே பாசனத்துக்குத் தண்ணீர் உதவவில்லை’ என வேதனையுடன் சொல்கிறார்கள் விவசாயிகள்.

திருச்சி கல்லணையிலிருந்து காவிரியைப் பின்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் திருவையாறை அடைந்தோம். வெண் தேவதையாய் கரைபுரண்ட காவிரியைக் கண்டு வாய்பிளக்க, நம் தோளைத் தட்டினார் ஒரு விவசாயி. “தம்பி, ரொம்ப வாய்பிளக்காதீங்க. இதுதான் காவிரியோட முதல்மடை. ஆனா, பக்கத்துல அரை கிலோ மீட்டர்ல இருக்கிற புனவாசல் கிராமத்துக்கு தண்ணியே போகல” என்றார். அந்தக் கிராமத்தை நோக்கிப் பயணித்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick