கழுகார் பதில்கள்! - உறவைச் சொன்னதில் உள்நோக்கம் உள்ளதா?

@ஜெகதீஷ், போரூர்.

அ.தி.மு.க-வில் மீண்டும் தர்மயுத்தமா?


‘தர்மயுத்தம்’, ரஜினிகாந்த் நடித்த படம். அவரிடம் கேட்டால் தெளிவான பதில் கிடைக்கும்.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் இத்தனை பேரழிவு ஏற்பட்டும், இந்தியாவின் பல மாநிலங்களில் ஆட்சிபுரியும் எந்த ஒரு பி.ஜே.பி அரசும் உதவ முன்வராதது எதைக் காட்டுகிறது?

வாட்ஸ்அப் பொய்ச்செய்தி தாக்குதல்களிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. உத்தரப் பிரதேசம் ரூ.15 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.10 கோடி, குஜராத் ரூ.10 கோடி என்று பி.ஜே.பி ஆளும் மாநிலங்களிலிருந்து நிதியுதவி செய்யப்பட்டிருக்கும் விஷயமும் இணையதளங்களில் இருக்கின்றன. உண்மை, வாசலைத் தாண்டுவதற்குள்... பொய், ஊரைச்சுற்றி வந்துவிடும். சோஷியல் மீடியா யுகத்தில் அது, இப்போது உலகத்தையே சுற்றிவிடுகிறது.

வாட்ஸ்அப்பில் பார்ப்பதும் பொய், வாட்ஸ்அப்பில் படிப்பதும் பொய், வாட்ஸ்அப்பில் பரப்புவதும் பொய் என்கிற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். தீர விசாரிக்காமல் எதையும் அடுத்தவருக்கு ஃபார்வர்டு செய்யமாட்டேன் என்கிற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் ஏற்றாலொழிய தீர்வே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick