மிஸ்டர் கழுகு: திகார் தயார்... வளைக்கப்படும் விஜயபாஸ்கர்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: திகார் தயார்... வளைக்கப்படும் விஜயபாஸ்கர்!

ழுகார் வந்ததும், தயாராக வைத்திருந்த பொக்கேவை நீட்டி, ‘‘நீர் தீர்க்கதரிசி’’ என்றோம். ‘‘ஜூ.வி-யில் ‘அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு’ என்று தலைப்பு வைக்கிறீர்கள். புதன்கிழமை காலையில் ஜூ.வி வெளியாகிறது. அன்றைய தினமே அதிரடியாக ரெய்டுகள் அரங்கேறுகின்றன’’ என்று நாம் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்த கழுகார், உடனே செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘அநேகமாக, விஜயபாஸ்கருக்கு திகார் ஜெயிலில் ஓர் அறை தயாராகிவிட்டது. தொடர்ந்து அவரையே குறிவைத்து ஏகப்பட்ட ஆவணங்களைத் திரட்டி வைத்திருக்கிறது  சி.பி.ஐ. ஏற்கெனவே பல தடவை சர்ச்சைகளில் சிக்கினாலும், தப்பித்துக்கொண்டே இருந்த விஜயபாஸ்கர், இம்முறை வகையாகச் சிக்குவார் என்கின்றன சி.பி.ஐ வட்டாரம். ஆகஸ்ட் 29-ம் தேதி குட்கா ஆலை அதிபர் மாதவ ராவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். ‘அவர் கொடுத்த வாக்கு மூலமும், சில போன் உரையாடல் விவரங்களும் விஜயபாஸ்கரை வளைக்கப் போதுமானவை’ என்கிறார்கள் சி.பி.ஐ வட்டாரத்தில்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில்தான் விஜயபாஸ்கர் முதன்முதலில் ரெய்டில் சிக்கினார். அவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங் களின் அடிப்படையில்தான், அப்போது அந்தத் தொகுதியின் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து ஏகமாகப் பணம் விளையாடியது தொடர்பான ஆவணங்கள் அவை. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலருடைய பெயர்களும் அடிபட்டன. விஷயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டு, வழக்காகவும் மாறியுள்ளது. ஆனால், அதில் அடுத்தகட்ட நகர்வுகள் ஏதுமில்லை. அதேசமயம், குட்கா வழக்கு வேகமெடுத்துவிட்டது. ஏற்கெனவே விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோதே, அவரை அமைச்சரவை யிலிருந்து நீக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால், எதுவுமே நடக்கவில்லை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick