அழகிரி பேரணி... தானா சேர்ந்த கூட்டமா?

‘அழகிரியின் ஆதரவாளர்கள்தான் அழகிரி பக்கம் உள்ளனர்; தி.மு.க-வின் தொண்டர்கள் தி.மு.க பக்கம்தான் உள்ளனர்’ என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது அழகிரி நடத்திய அமைதிப் பேரணி!

‘தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக அழகிரியை நீக்குகிறேன்’ என்ற முடிவை எடுத்தவர் கருணாநிதி. அவர் மரணம் அடைந்து... அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் காய்வதற்குள், “என்னைக் கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று பிரச்னையை ஆரம்பித்தார் அழகிரி. ஆகஸ்ட் 13-ம் தேதி கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தவந்த அழகிரி, “ஸ்டாலின் என்னைக் கட்சியில் சேர்க்க மறுக்கிறார்; உண்மைத் தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்றார். ‘‘செப்டம்பர் 5-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தப் போகிறேன்” என யுத்தத்துக்கு முன்னோட்டம் நடத்த தேதியும் குறித்தார். ‘‘அமைதிப் பேரணிக்கு 50,000 பேர் வருவார்கள்” என போலீஸ் அனுமதி வாங்கினார். மதுரையில் 10 நாட்கள் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு, 50 ஆயிரத்தை ஒரு லட்சம் பேராக உயர்த்தினார். அ.தி.மு.க-வை எதிர்த்து ஊருக்கு ஊர் கூட்டம் சேர்த்துவரும் டி.டி.வி.தினகரனுடன் அழகிரியைப் பலரும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick