மினி மீல்ஸ்

பன்னீரை அவமானப்படுத்திய கே.சி.வீரமணி!

வே
லூரில் செப்டம்பர் 3-ம் தேதி அ.தி.மு.க ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் தங்கமணி, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றனர். அமைச்சர் வீரமணி வரவேற்புரையாற்றியபோது, ‘‘அண்ணன் வீரமணி வாழ்க’’ என்று தொண்டர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பினர். அதைக் கேட்டு புன்சிரிப்பை உதிர்த்த வீரமணி, ‘‘அமைதியாக இருங்கள். அண்ணன் ஓ.பி.எஸ் இருக்கிறார்’’ என்றார். ஆனால், கோஷம் அடங்கவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick