"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!"

ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு, சுப.உதயகுமாருடன் கருத்து மோதல், பாக்யராஜுடன் பணத்தகராறு என சமீபமாக அதிகம் பேசுபொருளாகி இருக்கும் இயக்குநரும் நடிகருமான விசுவிடம்  சமகால அரசியல் சூழல் குறித்து ஒரு நேர்காணல்.

‘‘மாணவி ஷோபியாவின் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘எல்லோருக்கும் தங்கள் கருத்தைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால், அதை எங்கே சொல்கிறோம் என்பது முக்கியம். பி.ஜே.பி-யை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உள்ளது. மேடைபோட்டு முறையாக அனுமதிபெற்றுச் சொல்லுங்கள், தவறில்லை. விமானத்திலோ, விமான நிலையத்திலோ அதைச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.’’

‘‘ஹெச்.ராஜாவை ஆதரிக்கிறீர்கள். பிரிவினைவாதத்தைத் தூண்டும்விதமாக அவர் கூறிய கருத்துகளை எல்லாம் தெரிந்துகொண்டுதான் அவரை ஆதரிக்கிறீர்களா?’’

‘‘அவர் இப்போதுவரை என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. கோயில் சொத்துகளைக் கொள்ளையடிப்பவர்களைப் பற்றி அவர் பேசியதைப் பார்த்தே ஆதரிக்கிறேன். எங்கள் மதத்தின் கோயில் நிலங்களை மீட்பதற்காக ஹெச்.ராஜா பேசுகிறார். கோயில் நிலங்களில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. உடனடியாக இதைச் சரிசெய்ய வேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையை இந்துப் பெரியவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதை சரியாகப் பார்த்துக்கொள்வார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick