“அவ எனக்கு மட்டும் விஷம் கொடுத்துக் கொன்னுருக்கலாம்!”

‘தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொலை செய்தார்... மனைவியைக் கணவன் கொலை செய்தார்’ என ஏராளமான செய்திகளைக் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், காதலனுடன் சேர்வதற்காகத் தன் இரண்டு குழந்தைகளுக்குப் பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துக் கொலை செய்த ஒரு தாயை இப்போதுதான் காண்கிறோம். தமிழகம் முழுவதும் அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ள இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்த இடம் சென்னைக்கு அருகேயுள்ள குன்றத்தூர்.

தன் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியின் வீடு அமைந்துள்ள குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள அங்கனீஸ்வரர் தெருவுக்குச் சென்றோம். அபிராமியின் வீட்டுக்கு எதிரேயுள்ள மளிகைக் கடைக்காரரிடம் பேசினோம். “அந்தப் பொம்பளையைப் பத்தி எதுவுமே கேக்காதீங்க. அவ்ளோ ஆத்திரமா வருது. எனக்கு அந்தப் பிள்ளைங்க நினைப்பாவே இருக்குங்க. அந்தப் பையன் தினமும் சாயங்காலம் கீழ இறங்கி என் கடைக்கு லேஸ் பாக்கெட் வாங்க வருவான். ‘தாத்தா எனக்கொரு லேஸ்.. எங்க பாப்பாவுக்கொரு சாக்லேட்’னு அதிகாரமா கேப்பான். ரொம்ப ஷார்ப்பான பையன். தூக்க மாத்திரை கொடுத்து அவன் சாகலைன்னு தெரிஞ்ச பிறகாவது அவனை விட்டுருக்கலாம்ல. திரும்பவும் பால்ல விஷம் கலந்து கொடுத்திருக்கு அந்தப் பொண்ணு. அப்படிச் செய்யிறதுக்கு அந்தப் பொம்பள மனசு பாறாங்கல்லாதான் இருந்திருக்கணும். பையன் மடமடன்னு குடிச்சுட்டு, அவங்க அம்மாவுக்கு முத்தம் கொடுத்தானாம். அதை நினைக்க நினைக்க எனக்கு அழுகையும் ஆத்திரமாவும் வருதுங்க. எங்கிட்ட இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க...” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick