“அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்!"

கோசாலை பெயரால் கொள்ளை

கைவிடப்பட்ட மாடுகளுக்கும், கசாப்பு கடைக்குச் செல்லும் அபாயத்தில் உள்ள மாடுகளுக்கும் மறுவாழ்வு தரும் இடம்தான் கோசாலை. ஆனால், விவசாயிகளிடம் அடாவடி செய்து, நாட்டு மாடுகளை அபகரிக்கும் முயற்சியில் சில தனியார் கோசாலையினர் ஈடுபடுவதாகப் புகார்கள் குவிகின்றன. சமீபத்தில் அப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது திருப்பூர் மாவட்டம் காடையூரில் இயங்கிவரும் கொங்கா கோசாலை நிறுவனம்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையல்காரன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா. சுமார் 100 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான இவர், 80-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்துவருகிறார். விவசாயம் பொய்த்துப்போனதால், சமீபகாலமாக மாடுகளுக்குத் தீவனம் வாங்கச் சிரமப்பட்டிருக்கிறார். இதை உள்ளூர்க்காரர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட கொங்கா கோசாலை நிறுவனர் சிவக்குமார், அடிமாட்டு விலைக்கு அத்தனை மாடுகளையும் தந்துவிடுமாறு அருண்ராஜாவை மிரட்டியிருக்கிறார். அருண்ராஜா இதை விவசாய அமைப்புகளிடம் கொண்டுபோக, தற்போது பிரச்னை கொங்கு வட்டாரம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், கோவை விலங்குகள் நல வாரிய (Animal Welfare Board of India) அதிகாரிகள் சிலர், அருண்ராஜாவின் தோட்டத்துக்குச் சென்று மாடுகளை ஆய்வுசெய்தது, பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick