விடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் | Rajiv Gandhi assassination case convicts release issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

விடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்

விடுதலைச் சூழல் விரல்நுனி வரை வந்து கைநழுவிப் போன தருணங்கள் நிறைய. அதனால்தான், அவர்களால் கொண்டாட முடியவில்லை; நம்பிக்கை மட்டுமே தெரிவிக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் ஏழு பேருக்கு மீண்டும் ஒரு விடுதலைத் தருணம் வாய்த்திருக்கிறது. இம்முறை அது சாத்தியமாகுமா? செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி அளித்த பரிந்துரையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என்ன செய்யப்போகிறார்? எல்லாக் கண்களும் கிண்டி ராஜ்பவன் நோக்கியே இருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 27 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தனு, ராஜீவ் காந்தியோடு உடல் சிதறிப் பலியாகிப்போனார்; ராஜீவ் கொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் இந்த வழக்கில் சிக்கித் தண்டனை பெற்ற ஏழு பேர், 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். விடுதலை தொடர்பாக, மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. அதற்கு, சட்டப்படியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப் போடப்படும் முட்டுக்கட்டைகளை ஏழு பேரும் சட்டத்தின் துணைகொண்டே ஒவ்வொரு முறையும் உடைக்கின்றனர். இந்த முறையும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகள் உடைபட்டுள்ளன. ஆனால், விடுதலை சாத்தியமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick