"ரிப்பன் மாளிகையில் பறக்குது ஊழல் கொடி!"

சொத்து வரி முதல் கட்டட அனுமதி வரை...

‘‘சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் அனைவரையும் மாற்ற வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவால், மாநகராட்சி அதிகாரிகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

தன் வீட்டின் அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வைத்துள்ள ஜெனரேட்டரை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘‘சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் அனைவரையும் மாற்றி, அது குறித்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் உள்ள விதிமீறிய கட்டடங்கள்மீது, குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து விவரங்களைப் பெற்று, அவர்கள் பணியில் சேரும்போது இருந்த சொத்து விவரங்களையும் ஒப்பிட்டு, முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து 12 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று ஆகஸ்ட் 30-ம் தேதி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்