கழுகார் பதில்கள்! - அழகிரி பலமா, பலவீனமா?

கே.வினாயகம், விழுப்புரம்.

ராகுல் காந்தி திடீரென கைலாஷ் மானசரோவர் யாத்திரை போயிருக்கிறாரே?

கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின்போது ஒருமுறை அவர் வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானிகள் சற்றுத் தாமதமாகவேனும் அதைக் கண்டுபிடித்துச் சரிசெய்ததால் அவர் உயிர் தப்பினார். அப்போது வேண்டிக்கொண்டாராம். அதனால் யாத்திரை போயிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனால் 10 நாட்கள் டெல்லியில் இல்லை. ஏற்கெனவே 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாத காலம் அமெரிக்கா போயிருந்தார். அப்போது கட்சி விவகாரங்களைக் கவனிக்க நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துவிட்டுப் போனார். ராகுல் அப்படி எதுவும் செய்யவில்லை. ‘அம்மா சோனியா இருக்கிறார், பார்த்துக்கொள்வார்’ என்ற நினைப்பில் இப்படிச் செய்திருக்கலாம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick