மிஸ்டர் கழுகு: குட்கா... ஜார்ஜை பேச வைத்தது யார்?

ராஜநடை போட்டு வந்த கழுகார், நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால்போட்டபடி சுற்றுமுற்றும் பார்வையை வீசினார்.

‘‘என்ன இது, ஏதோ தர்பாரில் வந்து உட்கார்ந்தது போல பந்தா விடுகிறீர்?’’ என்றோம்.

‘‘இல்லை, நாற்காலி சார்ந்த ஒரு சங்கதி கேள்விப்பட்டேன். அதில் அமர்ந்தாலே ராஜயோகம் கிடைத்துவிடுமாம். அப்படி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துவிட்டு வந்திருக்கிறார் ஒரு தலைவர். அதுதான் நானும் உட்கார்ந்து பார்த்தேன்.’’

‘‘சரி... சரி... உமக்கும் ராஜயோகம் உண்டாகட்டும். முதலில் அந்தத் தலைவர் யார் என்று சொல்லும்.’’

‘‘எப்போதுமே ஜோசியம், பரிகாரம் என்றெல்லாம் பழக்கப்பட்ட போயஸ் தோட்டத்து வாடை வேறு யார் மீது வீசப்போகிறது... தினகரனேதான். சமீபத்தில், திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்ததாம். எதற்காக அழைக்கிறார்கள் என்று தெரியாமல் அதைத் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் அங்கே விசிட் அடித்திருக்கிறார். பலமான வரவேற்பு காட்டிய அரண்மனை வாரிசுகள், அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்களாம்.’’

‘‘ஓ, அதுதான் நீர் சொன்ன நாற்காலியோ!’’

‘‘ஆம், ‘நேரு ஒரு தடவை இதில் வந்தமர்ந்தார், பின்னர்தான் பிரதமரானார். அடுத்து, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த சிம்மாசனத்தில் வந்தமர்ந்தார். பிரதமராகிவிட்டார். இப்போது நீங்கள் உட்காருகிறீர்கள். நிச்சயமாக தமிழகத்தை ஆளும் யோகம் உண்டு’ என்று சொல்லி குஷியூட்டினார்களாம். அங்கு பிரஸ்னம் பார்க்கும் சிலர்தான், ‘தினகரனின் ராசி, ராஜயோகம் கொண்டதாக இருக்கிறது’ என்று சொன்னார்களாம்.’’

‘‘அதுசரி, இவரை அழைத்து கௌரவிப்பதால் அரண்மனைக்காரர்களுக்கு என்ன லாபம்?’’

‘‘எல்லாவற்றிலும் லாபக்கணக்கு இருக்குமா என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் யோகக்காரர்களை அழைத்து கௌரவிப்பது அரண்மனை வழக்கம் என்கிறார்கள். அப்படித்தான் அவர்களும் அழைத்து கௌரவித்ததாக தினகரன் தரப்பிலிருந்து செய்தியைக் கசியவிட்டுள்ளனர்.’’

‘‘இதில் ஏதும் சதுரங்க வேட்டை சமாசாரம் எல்லாம் இல்லைதானே?’’ என்று சொல்லி சிரித்த நாம், ‘‘சரி, அமைச்சர் நாற்காலி கதை என்னவாயிற்று?’’ என்று கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்