“இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாது!”

தமிழ்நாட்டுக்கு தனி திட்டத்துடன் களமிறங்கும் பி.ஜே.பி

வாஜ்பாய் ஆட்சிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலுக்கு பி.ஜே.பி கூட்டணி தயாரானபோது, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்தை பி.ஜே.பி முன்னெடுத்தது (அது வெற்றியைத் தரவில்லை என்பது வேறு விஷயம்!). அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பி.ஜே.பி-க்கு புதிய முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிக்கொடுத்துள்ளார். ‘அஜய் பாரத், அடல் பி.ஜே.பி’ (வெற்றிகரமான இந்தியா, உறுதியான பி.ஜே.பி) என்ற இந்த கோஷம் இனி அடிக்கடி காதுகளில் விழும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக எல்லாக் கட்சிகளும் தயாராகிவரும் நிலையில், செப்டம்பர் 8, 9 தேதிகளில் பி.ஜே.பி-யின் தேசியச் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது.

‘கட்சியின் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் வியூகத்தில், மோடி என்ற தலைவரை முன்னிறுத்தியே இந்தத் தேர்தலையும் பி.ஜே.பி சந்திக்கப் போகிறது’ என்பது இந்தச் செயற்குழு மூலம் உறுதியாகியுள்ளது. ‘‘மோடிக்கு இணையாக ஒப்பிட்டுப் பார்க்க இந்தியாவில் எந்தக் கட்சியிலும் தலைவர்கள் யாருமில்லை’’ என்று பெருமையுடன் சொன்ன அமித் ஷா, ‘‘இந்தியா முழுக்க பி.ஜே.பி-க்கு 1,500 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். 19 மாநிலங்களில் நாம் ஆட்சியில் இருக்கிறோம். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் 15 மாநிலங்களில் நாம் ஜெயித்திருக்கிறோம். 2019 தேர்தலில் பி.ஜே.பி-தான் ஜெயித்து மீண்டும் ஆட்சி அமைக்கும். இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பி.ஜே.பி ஆட்சி நீடிக்கும். நம்மை யாரும் அசைக்கமுடியாது’’ என்று குரலைச் சற்று உயர்த்தியே சொன்னார். இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick