ஆரத்தி எடுக்கவந்த குழந்தைகள்! - குட்காவைக் குழப்பும் விஜயபாஸ்கர்

ரசியல் நெருக்கடிகள் முற்றும்போது, கவனத்தைத் திசைதிருப்ப ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சிகளை நடத்துவது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கம். அவரது வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குவாரிகளில் 2017-ல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை முழுவதும் பிரமாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினார் விஜயபாஸ்கர். இப்போது குட்கா விவகாரத்தில் நெருக்கடி முற்றி, அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் நீக்கப்படுவார் என்ற செய்தி பரபரத்த நேரத்தில், தன் சொந்தத் தொகுதியில் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட விழாக்களில் அவர் பிஸி. செப்டம்பர் 8-ம் தேதி, 120-க்கும் மேற்பட்ட கார்கள் புடை சூழ, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட கலெக்டர் கணேஷ், அரசு அதிகாரிகள் சகிதமாக விராலிமலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் சென்று மக்கள் குறைகேட்பு கூட்டங்களை விஜயபாஸ்கர் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகள், முந்தைய நாள் மதியம் வெளியாகின. உடனடியாக, ‘மண்ணின் மைந்தர்களே! அம்மாவின் விசுவாசிகளே! மக்களின் காவலர்களே! வருக!’ போன்ற வாசகங்களுடன் அ.தி.மு.க-வினரின் கட்-அவுட்கள் பளபளத்தன. முந்தைய நாள் இரவே புதுக்கோட்டை வந்துவிட்ட விஜயபாஸ்கர், புதுக்கோட்டை அரசு விருந்தினர் மாளிகையான ரோஜா இல்லத்தில் தங்கினார். மறுநாள் காலையில் விராலிமலையை அடுத்த கல்குடி கிராமத்துக்கு தம்பிதுரை சகிதமாகச் சென்றார். அரை மணி நேரம் காலதாமதம் என்றாலும், அங்கு கட்சிக்காரர்களோ, அரசு அதிகாரிகளோ அவ்வளவாக இல்லை. அடுத்த பத்து நிமிடங்களில் கலெக்டர் கணேஷ், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு பதறியபடி வந்து சேர்ந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick