இரவில் கேட்ட வெடிச் சத்தம்! - இது காரைக்குடி ஸ்டெர்லைட்

தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் போல, காரைக்குடிக்கு டி.சி.பி எனப்படும் தமிழ்நாடு கெமிக்கல் புராடக்ட்ஸ் லிமிடெட் என்ற ரசாயன ஆலை பெரும் துயரங்களை அளித்துவருவதாகப் பொதுமக்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்.


ஆகஸ்ட் 6-ம் தேதி. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மாநிலமே கவலையில் இருந்த நேரம்... கோவிலூர் கிராம மக்களோ, வேறு ஒரு கவலையில் ஆழ்ந்திருந்தனர். இரவு சுமார் 8 மணி. டமால் என்று பெரும் வெடிச்சத்தம் கேட்டது. வீடுகளை விட்டு மக்கள் பதறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். ஒரே பதற்றம்.

காரைக்குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில், திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ளது கோவிலூர். இங்கு, 1971-ல் கூட்டுப் பங்கு நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, 1986-ல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட டி.சி.பி என்ற ரசாயனத் ஆலை உள்ளது. சோடியம் ஹைட்ரோசல்பேட், லிக்யூட் சல்பர் டைஆக்சைட் ஆகியவை இந்த ஆலையின் முதன்மை உற்பத்திப் பொருட்கள். இந்த ஆலையிலிருந்து வெளியாகும் ரசாயனத்தால் பெரும் இன்னலுக்கு ஆளாகிவருவதாகக் கூறுகிறார்கள் கோவிலூர் பகுதி மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick