தாலிக்குத் தங்கம் இல்லை! - குறுக்குவழியில் தடுக்கிறது தமிழக அரசு?

‘ஏழைப் பெண்களுக்குத் திருமணத்தின் போது இலவசமாகத் தாலிக்குத் தங்கம் வழங்கப்படும்’ என்று ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசு நிர்வாகத்தின் குழப்பமான நடவடிக்கைகள் காரணமாக, தாலிக்குத் தங்கம் கிடைக்காமல் ஏராளமான பெண்கள் தவித்து வருகின்றனர். 

2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இதை அமல்படுத்தினார். இதில் ஏராளமானோர் பலன் பெற்றனர். ஆனால், கடந்த பல மாதங்களாக இத்திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சில காரணங்களைச் சொல்லி, தாலிக்குத் தங்கம் மறுக்கப்படுவதாகப் பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டுமென்றால், ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.72 ஆயிரமாக இருக்க வேண்டும். ஆனால், ‘‘திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது, ‘ஆண்டு வருமானம் ரூ.84 ஆயிரம்’ என்று வேண்டுமென்றே அதிகாரிகள் கொடுக்கிறார்கள். இதனால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன’’ எனப் புகார்கள் வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick