“நீங்க போலீஸ்... நான் ஜஸ்டிஸ்!” - போலீஸைக் கதறவைத்த புல்லட் நாகராஜ்

வாட்ஸ்அப் மூலம் ஆடியோக்களை வெளியிட்டு தமிழக போலீஸின் பல்ஸ்ரேட்டை எகிறவைத்த ரவுடி புல்லட் நாகராஜ், எதிர்பாராதவிதமாக போலீஸில் சிக்கிவிட்டார்.

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து புல்லட் நாகராஜ் வெளியிட்ட ஆடியோ, வாட்ஸ்அப் மூலம் வைரலானது. “கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. ஆள் கிடைச்சான்னா, கமாண்டோக்களை விட்டு நொறுக்குறதா? முதலில் திருந்துங்க. இல்லை திருத்தப்படுவீர்கள். அப்புறம் நான் பொறுப்பு இல்லை. லாரி ஏத்திடுச்சேன்னு ஃபீல் பண்ணக்கூடாது. உன்னைய மாதிரி சிறையில் கைதியை கைவைச்ச ஒரே காரணத்துக்காக ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சுக் கொன்னது ஞாபமிருக்கும்...” என்று மிரட்டிய அந்த ஆடியோவைக் கேட்டு, போலீஸாரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick