“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்!” - தமிழக அரசு அந்தர்பல்டி | Malaysia Sand import issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்!” - தமிழக அரசு அந்தர்பல்டி

லேசியாவிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தரமானதாக இல்லை எனக் கூறி முடக்கிவைத்த தமிழக அரசு, இப்போது அந்தர் பல்டி அடித்து, அதே மணலை தான் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்போவதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

என்ன நடந்தது என விசாரித்தோம். புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 53.334 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் 2017 அக்டோபர் 21-ம் தேதி இறக்குமதி செய்தது. ரூ.7.75 கோடி மதிப்பிலான இந்த மணலுக்கு ரூ.2.88 கோடி சுங்க வரியும், ரூ.38.40 லட்சம் ஜி.எஸ்.டி-யும் அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick