வீடியோ விசாரணையில் லண்டன் டாக்டர்... பன்னீருக்குத் தயாராகும் சம்மன்!

ஆட்டத்தை முடிக்கிறது ஆணையம்

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம். ஓர் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் ஆயுள்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இருளான காட்டில் எல்லாத் திசைகளிலும் சென்று பார்த்து, பாதை புரிபடாமல் புறப்பட்ட இடத்திலேயே நிற்கும் வழிப்போக்கன் போலக் குழம்பி நிற்கிறது ஆணையம். இறுதிக்கட்ட விசாரணையில் ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், தம்பிதுரை உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப இப்போது ஆணையம் தயாராகிவருகிறது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது, அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் இரண்டு முறை அப்போலோ சென்றார். இரண்டு முறையும் ஜெயலலிதாவைப் பார்த்ததாக கவர்னர் தரப்பில் சொல்லப்பட்டது. ‘‘ஜெயலலிதாவை, அறைக்கதவில் இருக்கும் கண்ணாடி வழியாக கவர்னர் பார்த்தார். பதிலுக்கு ஜெயலலிதா கையசைத்தார்” என்று சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார், ஆணையத்தில் ஏற்கெனவே சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், வித்யாசாகர் ராவுக்குச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, செப்டம்பர் 11-ம் தேதி ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார். கவர்னரை அழைத்து விசாரிக்கமுடியாத சூழலில் இருக்கும் ஆணையம், கிட்டத்தட்ட இதை கவர்னரின் சாட்சியமாகக் கருத வேண்டியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick