காரைக் கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா!

கண்கலங்கும் கருணாநிதியின் கார் டிரைவர்

ருணாநிதியைச் சுமந்துகொண்டு, கோட்டைக்கும் அறிவாலயத்துக்கும் கோபாலபுரத்துக்குமாக ஓடிக் களைத்த கார், தற்போது கனத்த மௌனத்துடன் கோபாலபுரம் இல்லத்தின் வாசலோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கே தொடங்கி விடும் கருணாநிதியின் நாட்கள். நள்ளிரவு வரை விழித்திருந்து உழைப்பார். அவருக்கு கார் டிரைவராக இருப்பது என்பது, கிட்டத்தட்ட இதேபோல விழித்திருந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு. சஞ்சீவி அப்படித்தான் இருந்தார். ஓய்வின்றி உழைத்த கருணாநிதிக்கு ஓட்டுநராகப் பணிபுரிந்த முதியவர் சஞ்சீவி, கருணாநிதியுடனான கார்ப் பயணங்கள் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்...

‘‘சிறுவயதிலிருந்தே தி.மு.க-வினருடன் எனக்குப் பழக்கம் உண்டு. என்றாலும், 1975-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பேராசிரியர் அன்பழகனிடம் கார் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது மிசா காலம். கட்சியினர் அனைவரும் கைதாகிச் சிறை சென்றுவிட்டனர். கட்சி ஆபீஸில் ஓட்டுநர் பணியைத் தொடர்ந்தேன். மிசா காலத்துக்குப் பிறகு கருணாநிதிக்கு அறிமுகமாகி, அவரின் பிரத்யேக கார் ஓட்டுநராகப் பணிபுரிய ஆரம்பித்தேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர், கருணாநிதிக்கும் கார்களுக்குமான நெருக்கம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick