நீயற்ற நாட்கள் - கனிமொழி

ரு மாதம் கடந்துவிட்டது
பத்திரிகைகள் கிடக்கின்றன
பிரித்துப் படிக்க மனமில்லாமல்.
வாக்கியங்களும் சொற்களும்
வலுவிழந்து வழிகின்றன
காத்திரமற்று உச்சரிக்கப்படுவதால்.

புன்னகையின் கதகதப்பில்
எனக்காக மீதம் வைத்திருந்த
கதிர்கீற்றுகளை பின்மாலையில்
பத்திரமாய் தருவாய் -
நாற்காலி கிடக்கிறது
உன் மௌனத்தின் நீட்சியாய்.
தூசி அடர்ந்திருக்கிறது
புத்தக அலமாரிகளில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick