ஏனென்றால்... அவர் கருணாநிதி! | Karunanidhi Memories - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஏனென்றால்... அவர் கருணாநிதி!

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்பதுதான் கருணாநிதியின் கல்லறை வாசகமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதுகூட, கருணாநிதி தனக்குத்தானே எழுதிக்கொண்டது. தன்னை அவர் அப்படித்தான் மதிப்பீடு செய்துவைத்திருந்தார். கருணாநிதியின் அரசியல், ஆட்சி, கொள்கைகள், கருத்துகள், பேட்டிகள், செயல்பாடுகள் என்று மற்ற அத்தனை விஷயங்களிலும் மாறுபாடு கொண்ட ஒருவரால்கூட, கருணாநிதி தன்னைத்தானே மதிப்பீடு செய்துகொண்ட இந்த விஷயத்தில் மட்டும் மாறுபட முடியாது. தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் அவர் உழைத்தே கழித்தார். அதனால்தான், அவருக்கு எப்போதும் எதற்கும் நேரம் இல்லாமல் போனதே இல்லை. ‘தலைவர் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். எனவே, அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்’ என்று 2016 டிசம்பரில் அறிவாலயத்திலிருந்து ஓர் அறிக்கை வந்தது. அப்போது, கருணாநிதிக்கு வயது 93. அந்த அறிக்கை வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, கருணாநிதி தன் அன்றாட வேலைகளிலிருந்து விலகினார். ஆனால், அதற்கு முன்புவரை கருணாநிதியின் ஒரு நாள் ஷெட்யூல் என்பது, பல பணிகளால் பிணைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick