“உயிர் பிரிந்த அந்த நிமிடம்!” | Dr.Ezhilan sharing about Karuninidhi Memories - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“உயிர் பிரிந்த அந்த நிமிடம்!”

‘‘ஐயாவுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கிய பிறகு, என் மகன் பிரபாகரனையும் அடிக்கடி அழைத்துச் செல்வேன். ஐயாவும் குட்டிப்பையன் என்று அவனுக்கு சாக்லேட் கொடுப்பார். அவருக்கு ட்ரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, நான் பையனை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன். பையன் வந்திருக்கும் தகவலை அவரிடம் சொன்னதும், அருகில் கிடந்த மஞ்சள் துண்டை எடுத்துக் கழுத்தை மூடி மறைத்துக்கொண்டார். சின்னப் பையன் பயந்துவிடக் கூடாது என அவர் செய்த அந்தச் செயலைப் பார்த்து எனக்குக் கண்கள் கலங்கின. அப்போதும் என் பையனை அழைத்து முத்தம் கொடுத்தவர், வழக்கம்போல் சாக்லேட் கொடுத்தே அனுப்பிவைத்தார். அதை என்னால் மறக்க முடியாது’’ என்று நெகிழ்கிறார் டாக்டர் எழிலன்.

நாளெல்லாம் கூட்டங்கள் பேசிய கருணாநிதி, பேசாமலேயே அரசியல் வட்டத்தில் செய்தியாக இருந்த காலம் ஒன்று இருந்தது. அவரின் இறப்புக்கு முந்தைய கடைசி ஆறு மாதங்கள் அவருடனேயே இருந்து சிகிச்சை செய்தவர் டாக்டர் எழிலன். இவர், மாநிலத் திட்டக்கமிஷன் துணைத் தலைவராக இருந்த நாகநாதனின் மகன். கருணாநிதியின் அந்தக் கடைசிக் கால நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick