மினி மீல்ஸ்

ஆறுதல் அரசியல்!

மைச்சர் செல்லூர் ராஜு வீட்டுக்கு மு.க.அழகிரி சென்ற விவகாரம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அமைதிப் பேரணி நடத்திய பிறகும் தம்மை தி.மு.க தலைமை கண்டுகொள்ளாததால், மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருக்கிறார் அழகிரி. இதனால், தன் இருப்பைக் காட்ட சில அதிரடி வேலைகளில் இறங்கியுள்ளார். மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். சிலை திறக்கும் நிகழ்ச்சியை மிகப்பெரிய விழாவாக எடுப்பதற்கு அழகிரி திட்டமிட்டுள்ளாராம். ‘‘அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு அளிக்கும்’’ என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அழகிரியின் பேரணியைப் பாராட்டிப் பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜு. திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல்களில் அழகிரியைப் பயன்படுத்தி தி.மு.க வாக்குகளில் பிளவை ஏற்படுத்த அ.தி.மு.க தரப்பு முடிவுசெய்துள்ளதாம். இந்நிலையில், செப்டம்பர் 13-ம் தேதி மதுரையில் உள்ள செல்லூர் ராஜு வீட்டுக்குச் சென்றார் அழகிரி. சில நிமிடங்களில் வெளியில் வந்தவர், ‘‘தாயாரை இழந்து வாடும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஆறுதல் கூறவே வந்தேன். அரசியல் எதுவுமில்லை’’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick