மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

அஜய் தேவ்கனுடன் ஆக்‌ஷன் காட்சிகளில்நடிக்க எப்படித் தயாரானீர்கள்? 

குல் ப்ரீத் சிங்: சூப்பரான அனுபவமா இருந்தது. நான் எப்பவும் ஜிம்முக்கு சரியான நேரத்துக்குப் போய் வொர்க் அவுட் பண்ணுவேன். அஜய் தேவ்கன் சார் படத்துல ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கிறதால, ஜிம்ல அதிக நேரம் இருந்தேன். சண்டைக் காட்சிகளுக்காக ஸ்பெஷலா வொர்க் அவுட் செய்ததை என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில அப்லோடு பண்ணியிருந்தேனே, நீங்க பார்க்கலையா?

தெலுங்கில் டாப்ஸி நடித்த ‘ஆனன்டோ பிரம்மா’ எனும் ஹாரர் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் நடிகர், நடிகைகளுக்கான தேடல் நடைபெற்று வருகிறது.

ஸ்ரத்தா கபூர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஸ்திரி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick