காவிரி டெல்டாவைக் காவு வாங்கும் ஒற்றை அனுமதிக் கொள்கை!

மீத்தேன், ஷேல் காஸ்... இந்தச் சொற்களை, காவிரி டெல்டா மக்கள் சமீப காலமாகத்தான் சற்று மறந்து இருந்தார்கள். புதிய பலத்துடன் இவை மீண்டும் அச்சுறுத்த வந்துள்ளன. காரணம், மத்திய அரசின் புதிய நடைமுறை.

இதை விவரித்தார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் சேதுராமன். ‘‘1970-களிலிருந்து இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுப்பதற்கு முன், அதில் படிந்துள்ள மீத்தேனை எடுப்பதற்கான கொள்கை முடிவை, 1997-ம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவந்தாலும்கூட, இதற்கென விரிவான கொள்கைத் திட்டம் 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. 2013-ம் ஆண்டு ஷேல் காஸ் எடுப்பதற்கான கொள்கைத் திட்டம் உருவாக்கப்பட்டு, இதில் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆகிய அரசு நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்கலாம் என மத்திய அரசு முடிவெடுத்தது. 2016-ம் ஆண்டு இந்த நடைமுறை மாறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick