நிலக்கரி இறக்குமதிக்காக நிகழ்ந்ததா பவர்கட்? | Power cut issue in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நிலக்கரி இறக்குமதிக்காக நிகழ்ந்ததா பவர்கட்?

‘தமிழகத்தில் மின் தட்டுப்பாடும் இல்லை... மின்வெட்டும் இல்லை; அனல் மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடப்பதால், தற்காலிக மின்வெட்டு இருக்கிறது; நிலக்கரி தேவையான அளவு இருக்கிறது; ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்குத் தேவையான அளவு நிலக்கரியைச் சரியான நேரத்தில் கொடுப்பதில்லை; அதைக் கேட்டு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்; இருந்தாலும் வெளியிலிருந்து 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்போகிறோம்; 1,500 மெகாவாட் மின்சாரமும் வெளியிலிருந்து வாங்க டெண்டர் விடப்படும்; தமிழகத்தின் அணைகளில் தண்ணீர் நிறைய இருப்பதால், இந்த ஆண்டு மின்வெட்டே இருக்காது; ஆனால், காற்றாலைகள் ஏமாற்றிவிட்டதால் மின் உற்பத்தி குறைந்து, மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.’

- முற்றிலும் முன்னுக்குப்பின் முரணாக உள்ள இந்த வாக்குமூலங்கள் எல்லாம் தமிழக அரசு, தமிழக அரசின் மின் வாரியம், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் ஒவ்வொரு நேரத்திலும் உதிர்த்தவைதான். இப்படிக் குழப்பியவர்கள், கடைசியில் ‘30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் விடப்படும்’ என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். விரைவில், அதற்கான டெண்டர் திறக்கப்பட உள்ளது. இதை நோக்கமாக வைத்துத்தான், முன்னுக்குப்பின் முரணான வார்த்தைகளை உதிர்த்து, மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன்மூலம் செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, மக்களைப் படபடக்க வைத்து, கடைசியில், ‘பிரச்னையைத் தீர்க்க நிலக்கரியை இறக்குமதி செய்யப்போகிறோம்’ என்று அறிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick