புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

சென்னை புழல் சிறையில் குறிப்பிட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், அவர்கள் சுதந்திரமாகச் சுற்றி வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டது. சில அதிகாரிகளை மாட்டிவிடும் நோக்கில் அந்தப் படங்களை ரிலீஸ் செய்தார்களா... அல்லது, கைதிகளுக்குள் உள்ள கோஷ்டி பூசலில் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுத்தார்களா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

‘‘வந்தது கொஞ்சம்தான். மேலும் பல திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியில் பலரிடம் உள்ளன. அவை எந்த நிமிடமும் வெளியாகலாம்’’ என்று அதிரவைக்கிறார்கள் சில அதிகாரிகள். குறிப்பாக, ஒரு வீடியோ பற்றிச் சிறைத்துறை அதிகாரிகள் சிலர் திகிலுடன் பேசுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் ஒருவர் ஐ.டி ரெய்டில் சிக்கி புழல் சிறைக்கு வந்தார். கூடவே கூட்டாளிகளும் வந்தனர். காஞ்சிபுரத்தைக் குலைநடுங்க வைத்த ஒரு தாதாவின் உடன்பிறப்பும் அப்போது புழல் சிறையில் இருந்தது. இப்படி ஆறு பேர் சேர்ந்து சிறை வளாகத்தை எலைட் பாராக நினைத்து ஹாயாக மது அருந்தும் வீடியோதான் அது. விரைவில் அது வெளியாகக்கூடும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick