மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல் | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

‘‘நீர் சொன்னபடியே அமைச்சர் விஜயபாஸ்கர் பயங்கர ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். அமைச்சரவையில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார் போலிருக்கிறதே’’ என்றபடியே வரவேற்பு கொடுத்தோம் கழுகாருக்கு.

‘‘அவர் ஸ்ட்ராங்தான். ஆனால், நான் கொஞ்சம் வீக். நிறைய வேலை இருக்கிறது கேட்கவேண்டியதையெல்லாம் விரைவாகக் கேளும்’’ என்று படபடத்தார் கழுகார்.

‘‘என்னய்யா இது, உமக்கும் இப்படி வியர்க்கிறது. எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறீர்? பி.பி மாத்திரையெல்லாம் சரியாகத்தானே சாப்பிடுகிறீர்கள்’’ என்று சாந்தமாகக் கேட்டோம்.

‘‘ஓ... ஹெச்.ராஜாவின் அந்த விநாயகர் சதுர்த்தி வீடியோவைப் பார்த்துவிட்டீர். அதுபற்றி உமக்குச் செய்திகள் வேண்டும், அப்படித்தானே? அவரால் டெல்லி கட்சித் தலைமைக்கும் இப்போது வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்புதான், ‘கட்சியினர் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்... பேசும்போது நாவடக்கம் வேண்டும்’ என்றெல்லாம் வகுப்பெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக, பசுப் பாதுகாவலர்கள் மற்றும் எஸ்.வி.சேகர் விவகாரம் வெடித்தபோதுதான் பிரதமர் அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பி.ஜே.பி-யினர் கொஞ்சம் அடங்கித்தான் கிடந்தனர்.’’

‘‘இப்போது பொங்கிவிட்டாரே ஹெச்.ராஜா.’’

‘‘தமிழகம் முழுக்கவே இந்த தடவை விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் வைக்கும் விஷயத்தில் உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி போலீஸார் கறாராகவே நின்றனர். இஷ்டப்பட்ட இடத்தில் சிலைகளை வைப்பது, மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவது போன்றவற்றுக்கெல்லாம் பல இடங்களில் தடைபோட்டனர். இதுகுறித்து பி.ஜே.பி-யினரும் இந்து அமைப்பினரும் புழுங்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில், திருமயம் அருகேயுள்ள அந்த கிராமத்துக்கு வந்த ராஜாவிடம் பலரும் இதைப் பற்றி உசுப்பேற்ற, வழக்கம்போல டென்ஷன் எகிறிவிட்டது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick