திருப்பரங்குன்றம் கணக்கு! | Thirupparankundram by-election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

திருப்பரங்குன்றம் கணக்கு!

தினகரனை எதிர்பார்க்கும் தி.மு.க... அழகிரியை எதிர்பார்க்கும் அ.தி.மு.க... வரவை எதிர்பார்க்கும் வாக்காளர்கள்...

தேர்தல் ஆணையம் இன்னும் தேதியை அறிவிக்கவில்லை; இவர்தான் வேட்பாளர் என்று தெரியவும் இல்லை. ஆனாலும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளில் ஆளும்கட்சி தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. தினமொரு பூத் கமிட்டி கூட்டம், பிரசார அணிக் கூட்டம், சைக்கிள் பேரணி என அதகளம் செய்யத் தொடங்கிவிட்டனர். தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அ.ம.மு.க-வினர் பம்பரமாகச் சுற்றிவந்து, ஆளும்கட்சிக்கு கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். சுவர்களில் இவர்கள் இரட்டை இலையும் குக்கரும் வரைந்து தள்ள, உதயசூரியன் சின்னத்தை அரிதாகவே பார்க்க முடிகிறது. ஏனோ, தி.மு.க தரப்பில் சுணக்கமாகவே இருக்கிறார்கள். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற  தகவலை அறிந்துகொள்ளாமலேயே மரணமடைந்தார் சீனிவேல். அதன்பின், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஏ.கே.போஸும் சமீபத்தில் மரணமடைந்தார். தொடர் மரணங்களைப் பார்த்து அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் ‘திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா’ என்று ஆரம்பத்தில் யோசித்தனர். ஆனாலும், ஆளும்கட்சியாக இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பணம் செலவழிக்க வேண்டியிருக்காது என்பதால், இப்போது பலரும் சீட்டுக்கு வரிசைகட்டி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick