ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

ண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சிக்குப் பெயர் இருந்தாலும், எம்.ஜி.ஆரைத்தான் பிதாமகனாகக் கொண்டாடுவார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம், அண்ணாமீதான எடப்பாடியின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் வீட்டை 1980-ல் நினைவு இல்லமாக மாற்றிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அதன் பிறகு, அந்த வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வரும் சூழல் அமையவில்லை. பலமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, சில நாட்களே முதல்வர் பதவியில் இருந்த ஜானகி, மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க-வின் முதல்வர்கள் யாரும் இதுவரை அண்ணா நினைவு இல்லம் வந்ததில்லை. ஆனால், கடந்த ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்பாக, காஞ்சிபுரம் வந்து அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அவர் தற்போது, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், அண்ணா இல்லத்திலிருந்தே நிகழ்ச்சிகளைத் தொடங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick